2025 மே 16, வெள்ளிக்கிழமை

20 ஐ நிறைவேற்ற முடியாவிடின் அதிகாரத்தை எம்மிடம் தாருங்கள்: நிமல்

Kanagaraj   / 2015 ஜூன் 17 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய தேர்தல் முறைமையான 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிகொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு முடியாவிட்டால், அரச அதிகாரங்களை விட்டு விட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் அரசாங்கத்தை ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா கோரியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றவிடாது கூட்டணி கட்சிகளுடன் ஐக்கிய தேசியக்கட்சி இணைந்து இரட்டைவேடம் பூண்டுகொண்டு காலால் இழுத்துகொண்டிருக்கின்றது. 

அவற்றை நிறைவேற்றிகொள்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முறையான நடவடிக்கைகளை எடுத்துகொண்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .