Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 18 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் கலாசாரத்தை மாற்றியமைக்க சில தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். நாடு போய்க்கொண்டிருந்த திசையிலிருந்து மாற்றி, வேறு திசையை நோக்கி நாட்டை இழுத்துச் செல்ல அந்த தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
எதிர்காலத்தில், விகாரைகளில் இடம்பெறும் பூஜைகளுக்கான மேடைகளில் ஏறுவதை விடுத்து, அரசியல் மேடைகளில் ஏறப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள விகாரையொன்றில் நேற்று புதன்கிழமை (17) வழிபாடுகளில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி, அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சிங்களவர்களின் கலாசாரத்தை தூரமாக்கிப் பார்ப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர். மனித உரிமைகள், சமத்துவம் பற்றி பேசி, இனத்தை அழிக்கும் சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 May 2025