2025 மே 16, வெள்ளிக்கிழமை

2015இல் படை முகாம்கள் அகற்றப்படவில்லை: இராணுவம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 18 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்றுவரை யாழ்ப்பாணத்தில் 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன என்று முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள இராணுவ தலைமையகம், 2009 மே மாதம் 19ஆம் திகதி முதலே வடக்கிலிருந்த இராணுவ முகாம்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்றும், இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் எந்தவொரு முகாமும் அகற்றப்படவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

வடக்கின் பாதுகாப்பு தொடர்பில் இராணுவ தலைமையகம் தொடர்ந்தும் அவதானத்துடனேயே இருந்து வருகின்றது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை இராணுவம் ஒருபோதும் தளர்வடையச் செய்யவில்லை என்றும் இராணுவம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 2009இல் 07, 2010 -09, 2011 - 04, 2012 - 0, 2013 - 15 2014 - 24 மற்றும் 2015இல் ஒரு முகாமும் அகற்றப்படாத நிலையில் 59 முகாம்கள் இவ்வருடங்களில் அகற்றப்பட்டுள்ளன என்ற எண்ணிக்கையையும், இராணுவ தலைமையகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .