2025 மே 16, வெள்ளிக்கிழமை

கழிவு தேயிலை கொண்டுசென்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 19 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

விற்பனை செய்வதற்கு லொறியொன்றில் கழிவு தேயிலை கொண்டுசென்றதாகக் கூறப்படும் 34, 36 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி லொறியில் 41 ஆயிரத்து 940 கிலோகிராம் கழிவு தேயிலை  கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்கிஸை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு  கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இந்த லொறி முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்தச் சந்தேக நபர்கள் கடுகண்ணாவை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .