2025 மே 16, வெள்ளிக்கிழமை

மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக்க ஸ்ரீல.சு.க. குழு தீர்மானம்

Thipaan   / 2015 ஜூன் 20 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினால் நியமிக்கப்பட்ட அறுவர் அடங்கிய குழு ஏகமனாதாக தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என்ன கருதுகிறார் என்பது தொடர்பில் கவலையில்லையென அக்குழு அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .