2025 மே 16, வெள்ளிக்கிழமை

எல்.ரீ.ரீ.ஈ.யின் நிதி வலையமைப்பு இன்னுமும் இயங்குகிறது: அமெரிக்கா

Thipaan   / 2015 ஜூன் 20 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக இலங்கை அரசாங்கம் தோற்கடித்தபோதும் அவர்களுக்கான நிதியுதவிகள் தொடர்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு பணியகம் வெளியிட்ட  அறிக்கையை மேற்கோள் காட்டி, அத்திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதி வலையமைப்பு 2014ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாகவும்  இராஜாங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

எல்.ரீ.ரீ.ஈ.யினர் தமது சர்வதேச தொடர்புகளை பயன்படுத்தியும் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவிலுள்ள தமிழ் டயஸ்போராக்களின் உதவியுடனும் தமக்கு தேவையான ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் வேறு தேவைகளை பெற்றுக் கொள்வதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .