2025 மே 16, வெள்ளிக்கிழமை

நான்கு மாணவிகள் துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது

Sudharshini   / 2015 ஜூன் 20 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொராயா பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 10 மற்றும் 11 வயதுக்குட்பட்ட 4 மாணவிகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய ஆசிரியர் ஒருவரை லிந்துலை பொலிஸார் நேற்று (19) மாலை கைதுசெய்துள்ளனர்.

குறித்த மாணவிகள் நால்வரையும் பரிசோதனைகளுக்காக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரை நுவரெலியா நீதவான் முன்னிலையில் இன்று (20) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, குறித்த சந்தேக நபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் பொலிஸாரிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .