2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ரவிராஜ் கொலை; கடற்படை வீரருக்கு பிணை

Gavitha   / 2015 ஜூன் 29 , பி.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபரை 25,000 ரூபாய் காசுப்பிணையிலும் 500,000 ரூபாய் பெறுமதியான இரு சரீரப்பிணையிலும் செல்ல, கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் லலித் ஜயசூரிய, நேற்று திங்கட்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.

நேவி சம்பத் என்று கூறப்படும் கடற்படை வீரரான நிலங்க சம்பத் முனசிங்க என்பவருக்கே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேக நபரின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதுடன், சாட்சியங்களை இல்லாது செய்வதிலிருந்து விலகி இருக்குமாறும் சந்தேகநபருக்கு நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேவி சம்பத் உள்ளிட்ட நான்கு கடற்படை அதிகாரிகள், நடராஜா ரவிராஜை கொலை செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X