Kanagaraj / 2015 ஜூலை 07 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் இருந்த பிரச்சினைகள் காரணமாக 36 வருடங்களாக பிரிந்திருந்த சகோதரரும் சகோதரியும், வட்ஸ்அப் செய்தி பரிமாற்றி செயலி மூலம் மீண்டும் சந்தித்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.
தற்போது 72 வயதான சாமுவேல் என்ற தம்பியும் 76 வயதான ஞானப்பூ என்ற அக்காவுமே கடந்த வெள்ளிக்கிழமை இவ்வாறு பல வருடங்களுக்கு பின்னர் சந்தித்துள்ளனர்.
கடந்த 1982ஆம் ஆண்டு கண்டியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக சாமுவேல் தனது சகோதரி ஞானப்பூவை பிரிந்து, தனது மனைவி சலோமி மற்றும் தனது குழந்தையான யேசுடொஸ்ஸூடன் இராமேஸ்வரத்துக்கு புலம் பெயர்ந்து சென்றுள்ளனர்.
சாமுவேல், இராமேஸ்வரத்தில் ஒரு தேவாலயத்தில் வேலைசெய்து தனது சீவியத்தை நடத்தி வந்துள்ளார். இருப்பினும் சாமுவேல் தனது சகோதரியை கண்டுபிடிப்பதிலும் அக்கறையாக இருந்து வந்துள்ளார். சாமுவேலும் அவருடைய மகனான யேசுடொஸ்ஸூம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதியில், ஞானப்பூவை தேடிவந்துள்ளனர்.
ஞானப்பூ, கண்டிக்கு அடிக்கடி வந்த தூத்துக்குடி வியாபாரியான இராசைய்யா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனாலேயே சாமுவேலும் அவருடைய மகனும் ஞானப்பூவை தூத்துக்குடியில் தேடி வந்துள்ளனர்.
அண்மையில் இலங்கைக்கு வந்த சாமுவேல், தனது சகோதரியின் படத்தை தனது மனைவியான சலோமியின் உறவினர்களிடம் காட்டினார். இதனைத் தொடர்ந்து சலோமியின் உறவினர்கள் தூத்துக்குடியில் வசிக்கும் சிலரின் அலைபேசி இலக்கங்களை கொடுத்துள்ளனர்.
'இந்த அலைபேசி இலக்கங்களுக்கு நாம் எமது மாமியின் புகைப்படங்களையும் அவர் பற்றிய தகவல்களையும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியிருந்தோம்.
அதிஷ்டவசமாக எமது செய்திகள், மாமியின் (ஞானப்பூ) குடும்பத்துக்கு போய் சேர்ந்துள்ளன. அவர்கள் உடனடியாக எம்முடன் தொடர்பு கொண்டனர்' என்று யேசுடெஸ் தெரிவித்தார்.
'நாம் அனைவரும் திருச்சியில் வெள்ளிக்கிழமை சந்தித்தோம். எனது அப்பா தனது மூத்த சகோதரியை 36 வருடங்களின் பின்னர் சந்தித்தார்' என யேசுடொஸ் கூறியுள்ளார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago