Gavitha / 2015 ஜூலை 13 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பல தரப்புக்களிலிருந்தும் அழைப்புக்கள் வருகின்ற போதிலும், நான் இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளேன் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
தனது முகப்புத்தகக் கணக்கில் செய்திக் குறிப்பொன்றை பதிவேற்றம் செய்துள்ள கோட்டாபய அதில், 'நாட்டில் நிலைகொண்டிருந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் இந்நாட்டை அபிவிருத்தியின் பாதையில் கொண்டுசெல்வதற்கும் நான் வழங்கிய ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்க கடமைப்பட்டுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டுக்காகவும் நாட்டின் அபிவிருத்திக்காகவும் நான் எனது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவேன். நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் சவாலொன்று எமக்கு முன்னால் உள்ளது. அதற்காக நாம் ஒன்றுபடுவோம்' என்று கோட்டாபய தனது செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago