2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும்: ஹக்கீம்

Kanagaraj   / 2015 ஜூலை 14 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பேன் என கூறப்பட்டபோதும் தற்போது அதில் சிறிது மாத்திரமே குறைக்கப்பட்டுள்ளது  என தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி வழங்கி வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தான் கொடுத்த வாக்குறுதிகளில் சிறிய  அளவை மட்டுமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றியுள்ளார். பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பூரணமாக நிறைவேற்றப்படும் என தான் நம்புவதாகவும்  அவர்; தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பேரணியில் கலந்துகொண்ட போது, அவர் இதனை கூறியுள்ளார்.

'நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பேன் என கூறப்பட்டபோதும் சில அதிகாரங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளன.

வரம்புக்குட்பட்ட பலம் மாத்திரம் குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றை செய்து ஒன்றை மறைக்கின்றனர், ஆனால், வாக்;குறுதி அளித்தால் அதனை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும்' என அவர் மேலும் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X