2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அரச சொத்துக்களைப் பயன்படுத்த ஒழுங்கு விதிகள் விதிப்பு

Princiya Dixci   / 2015 ஜூலை 21 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலில் அரச வாகனங்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகெப்டர்கள் மற்றும் அரச சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு கடும் ஒழுங்கு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.  

ஒழுங்கு விதிகள் அடங்கிய சுற்றறிக்கை, சகல அரசாங்க திணைக்களங்கள், அமைச்சுக்கள் மற்றும் காரியாலயங்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோனினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
தேர்தலுக்காக அரச வாகனங்களைப் பயன்படுத்தினால் ஒரு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அரச ஊழியர்களுக்கு நியமனம் வழங்குதல், இடமாற்றம் வழங்குதல் மற்றும் பதவியுயர்வு வழங்குதல் நடைமுறையில் உள்ள சுற்றறிக்கையின் பிரகாரமே முன்னெடுக்க முடியும் என்றும் நேற்று திங்கட்கிழமை (20) அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அரச வாகனங்கள் உடனடியாக கையளிக்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X