2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கைத்துப்பாக்கியுடன் கைதான 3 இராணுவ வீரர்களுக்கு பிணை

Kanagaraj   / 2015 ஜூலை 22 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவில் உடை அணிந்திருந்த நிலையில் கைத்துப்பாக்கியை வைத்துகொண்டு போலி இலக்க தகட்டை பயன்படுத்தி வெள்ளை வானில் பயணித்துகொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்ட இராணு வீரர்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை, மிரிஹான பொலிஸார், மிரிஹான பொலிஸூக்கு பின்னாள் உள்ள ஆரியதாச மாவத்தையில் வைத்து 20ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 7.30க்கு கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரையும் நுககொடை பதில் நீதவான் சுனிதா நாணயக்கார முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்திய போது அந்த மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரபிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X