2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மஹிந்த தரப்பால் இடையூறு: பியசேன

Menaka Mookandi   / 2015 ஜூலை 24 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள் தொடர்பில் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் தெளிவுபடுத்துவதற்காக கட்சியின் பொதுக்கூட்டத்தைக் கூட்டுமாறு கூட்டமைப்பின் காலி மாவட்ட  முதன்மை வேட்பாளரும் தொழிற்பயிற்சிகள் அமைச்சருமான பியசேன கமகே கோரியுள்ளார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, நாளை சனிக்கிழமை (25), நெலுவ, தவலம, நாகொட மற்றும் நியகம போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களை விட, காலி மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடப்பதில் மஹிந்த தரப்பினரால் பாரிய இடையூறுகள் விளைவிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெளிவுபடுத்தியதாகவும் பியசேன கமகே கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X