2025 மே 16, வெள்ளிக்கிழமை

வட,கிழக்கில் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக நீதியும் நேர்மையுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே தெரிவித்துள்ளது.

அதன் நிறைவேற்றுப்பணிப்பளார் கீர்த்தி தென்னக்கோன் இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'நாட்டில் ஏனைய பாகங்களில் நேர்மையான முறையில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறிய வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, காத்தான்குடி, அக்கறைப்பற்று, மன்னார், முசலி, ஆகிய பிரதேசங்களில் தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளன. இப்பகுதிகளில் காட்டுச்சட்டம் அமுலில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என அவர் கூறினார்.

'காத்தான்குடியிலுள்ள சமயத்தலமொன்றில் வேட்பாளர் ஒருவரின் விருப்பு வாக்கு இலக்கம் பொறிக்கப்பட்ட உலருணவு பொதிகளும் நீர் போத்தல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து பொலிஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் தேர்தல் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படும்போது இப்பிரதேசத்தில் இவ்வாறு நடப்பது நீதியான தேர்தலுக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடாகும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்' என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .