2025 மே 16, வெள்ளிக்கிழமை

10 தடவையாக கசிப்புடன் கைதானவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நேசமணி

சுழிபுரம் குடாக்கனை பகுதியில் கசிப்பு காய்ச்சுதல் மற்றும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக 10 ஆவது தடவையாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான், கறுப்பையா ஜீவராணி வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார்.

கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இவரை, வியாழக்கிழமை (06) வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்திருந்தனர். சந்தேகநபரிடமிருந்து 5 போத்தல் கசிப்பு, கசிப்பு காய்ச்சும் 4 பெரல்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கசிப்பு காய்சும் நடவடிக்கையில் இவர் ஈடுபட்டிருந்த நிலையில் இதற்கு முன்னர் 9 தடவைகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் கூறினர். இந்நிலையில் 10 ஆவது தடவையாக தற்போது கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .