2025 மே 16, வெள்ளிக்கிழமை

புளுமென்டல் துப்பாக்கிச்சூடு: 5 பேர் கைது: ஒருவருக்கு வலைவீச்சு

George   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை, புளுமென்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலுக்கு அமைய மற்றுமொரு சந்தேகநபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட கார், ருச்சிக கயான் ஜயவர்தன என்பவரால் வாடகைக்கு பெறப்பட்டது என்பதுடன் அவர் கொழும்பு மாநகரசபையின் சாரதியாக கடமையாற்றியவர் என பொலிஸ் ஊடகபேச்சாளரும் உதவிபொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .