Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி செய்து கொள்வதற்கும் வட, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கும் அடிமையில்லா நாட்டில் சுதந்திரமான மனிதனாக சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமின்றி அனைவரும் இலங்கையர்கள் என்ற சம உரிமையுடன் வாழ்வதற்கும் கொழும்பு மாவட்ட தமிழ் பேசும் மக்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து ரணில் விக்கிரமசிங்கவை அதி கூடிய வாக்குகளால் வெற்றிபெறசெய்ய வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் தெரிவித்தார்.
கொழும்பு டுப்லிகேசன் வீதியில்; அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஏற்பாட்டில் அணமையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையிலே இருக்கின்ற அரசியல்வாதிகளில் மிக உயரிய பண்புகளைக் கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங், சிறுபான்மை மக்களின் நண்பன் என்பதோடு சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளை வழங்குவதில் துவேஷ உணர்வைத் தவிர்த்து திறந்த மனதோடு நடுநிலையாக செயற்படுபவர் என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை தோற்றுவிக்க ஒரு பாரிய பங்களிப்பை ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக செய்ய முடியும் என்பது குறித்து நாங்கள் உணர்ந்திருக்கின்றோம்.
மிக நீண்ட காலமாக உரிமைக்காகவும் அதிகாரப் பகிர்வுக்காகவும் போராடி வரும் வட, கிழக்கு மக்களுக்கு ஒற்றையாட்சிக்குள் பொருத்தமான அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியான ஒரு நிலைப்பாட்டில் உள்ளதுடன், அது குறித்து சாதகமான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றார்.
நாட்டில் இருந்து இனவாத செயற்பாடுகளை முற்றாக துடைத்தெறிவதற்கு கொழும்புவாழ் தமிழ் மக்கள், தமது முதலாவது விருப்பு வாக்கினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கி அவரை அதிகூடிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து புதிய சரித்திரம் ஒன்றை உருவாக்க வேண்டும். அத்தோடு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் வாக்களித்து பெரும்பான்மை வாக்குகளால் அவரையும் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ய வேண்டும் என கே.வேலாயுதம் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
15 May 2025