Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Kanagaraj / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் அரச புலனாய்வு பணியகத்தினால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு நேற்று திங்கட்கிழமை (10) பணித்தது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைக்குமாறு கோரி நவ சம சமாஜக் கட்சியின் தேசியப்பட்டியலில் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தரணி சேனக பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆராய்ந்த போதே உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு பணித்துள்ளது.
இந்த மனுவில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணையாளர், மக்கள் சமாதான அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு தேவைப்படுமாயின் அவைதொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்குமாறும் உயர்நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
முறைப்பாட்டாளர் தனக்கு பாதுகாப்ப வேண்டுமென கோருவாராயின் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதில் எவ்விதமான ஆட்சேபனைகளும் இல்லை என்று சட்டமா அதிபர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இந்த அடுத்து இந்த மனுமீதான விசாரணை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மனு, பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவன், அனில் குணரத்ன மற்றும் பியசாத் டெப் ஆகியோர் கொண்ட குழுவின் முன்னிலையிலேயே பரிசீலிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 May 2025