2025 மே 16, வெள்ளிக்கிழமை

சஜினின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை, சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (11) அறிவித்தது.

பொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்றும் ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 22 வாகனங்களை, சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தினார் என்றும் சஜின் வாஸ் எம்.பி.க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .