2025 மே 16, வெள்ளிக்கிழமை

கத்தியால் குத்தியும் வெட்டியும் மூவர் படுகொலை

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருவேறு பிரதேசங்களில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கத்தியால் குத்தியும், வெட்டியுமே கொலைச்செய்யப்பட்டுள்ளனர். இவ்விரு சம்பங்களும் மெதிரிகிரிய மற்றும் ரத்மலானை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன.

மெதிரிகிரிய, பனொக்வௌ எனுமிடத்தில் வயலுக்கு தண்ணீரை திருப்பிவிடுதல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைகளை அடுத்து 30 மற்றும் 40 வயதுகளைச்சேர்ந்த விவசாயிகள் இருவர் கத்தியால் கத்தி கொலைச்செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து சந்தேகத்தின் பேரில் 60 வயதான மற்றுமொரு விவசாயி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகின்ற இந்த பிரதேசத்தில் இருக்கின்ற விவசாயிகள், வாரத்துக்கு ஒருதடவையே தங்களுடைய வயல்நிலங்களுக்கு இரவு வேளைகளில் தண்ணீரை திருப்பி விட்டுக்கொள்வர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, இரத்மலானை பொறுபன நிர்மான தளத்தில் டையில் பாஸ் ஒருவர், கத்தியால் தாக்கி கொலைச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைபாட்டையடுத்து சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு பாஸ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .