2025 மே 16, வெள்ளிக்கிழமை

ராஜீவ் கொலை வழக்கு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

Thipaan   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசு மனு மீதான அனைத்து வாதங்களும் முடிவடைந்ததையடுத்து,இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு தொடர்பில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, பினாகி சந்திர கோஸ், அபய் மனோகர் சாப்ரே, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.

 இந்த விவகாரத்தில் தமிழக அரசின் வாதம் கடந்த வியாழக்கிழமை நிறைவடைந்தது. இந்த நிலையில், ஆயுள் தண்டனை கைதிகள் தரப்பு, மற்ற மாநில அரசுத் தரப்பு வாதங்கள் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு செவ்வாய்க்கிழமை (11) எடுத்துரைக்கப்பட்டது.

7 தமிழர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். இன்றைய விசாரணையின் போது, 7 தமிழரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினால் குடியரசுத் தலைவரைத் தான் அணுகலாம். 23 ஆண்டுகாலம் சிறையில் இருந்ததாலேயே விடுதலை செய்துவிடலாம் என்ற தமிழக அரசின் முடிவு சரியல்ல என்று மத்திய அரசு வாதிட்டது.

இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை 1 வார காலத்துக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .