Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் இடம்பெறவிருக்கின்ற நிலையில் பிரதான கட்சிகளின் சூறாவளி தேர்தல் பிரசாரங்கள் சூடுப்பிடித்துள்ளன.
இறுதிநேர தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில்இ தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம்இ நாடாளுமன்ற தேர்தல் சட்டத்திட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமைஇ 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாக்களிப்பு தினமான 17ஆம் திகதி திங்கட்கிழமையும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முழுமையாக தடைச்செய்யப்பட்டுள்ளன.
இந்த தடையை மீறுவோருக்கு எதிராக ஆகக்குறைந்த அதிகாரத்தை பயன்படுத்தி கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர்இ பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளைஇ தேர்தல் பிரசாங்களுக்கு இன்று 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கடும் கட்டுப்பாடுள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடு 13 ஆம் திகதி வியாழக்கிழமையன்றும் அமுலில் இருந்ததாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரங்கள் இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை மட்டுமே முன்னெடுக்கமுடியும். அதற்கும் அப்பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரியிடமிருந்து உரிய முறையில் அனுமதியை பெற்றுகொண்டிருக்க வேண்டும். எனினும்இ அன்றைய தினம் இரவு 8 மணிவரை மட்டுமே வீட்டுக்கு வீடு சென்று பிரசார பணிகளை முன்னெடுக்க முடியும்.
அத்துடன்இ இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனுமதியை பெற்றுகொண்டு அதனூடாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவ்வாறான பிரசாரங்களை முன்னெடுப்பதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இசை நிகழ்;ச்சிகள் நடத்தப்பட்டாலும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறும் அந்த பூமிக்கு அப்பால் ஒலி விரிவாகி செல்வதற்கு இடமளிக்கவேண்டாம் என்றும் அதுதொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளைஇ வீட்டுக்கு வீடு சென்று முன்னெடுக்கும் பிரசார நடவடிக்கைகளை இன்றிரவு 8 மணியுடன் நிறைவுக்கு கொள்ளுமாறும் அதற்கு பின்னர் அதனை கைவிடுமாறும் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இவைத்தொடர்பில் ஆதார பூர்வமான முறைபாடுகள் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று 14ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றது. அதற்கு பின்னர் வாக்களிப்பு தினம் வரையிலும் மௌக்காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுஇ வாக்களாளர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து தகவல்களையும் சிந்தித்துப்பார்த்து பொருத்தமான தீர்மானமொன்றுக்கு வருவதற்கான கால அவகாசத்தை வழங்குவதாகும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
15 May 2025