2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மைத்திரியின் கடிதத்தை மீள்பிரசுரிக்கத் தடை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தை மீண்டும் மீண்டும் பிரசுரிக்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, ஊடகங்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.

இந்த கடிதம் தொடர்பில் மீண்டும் மீண்டும் பிரசுரிப்பதால் மஹிந்த ராஜபக்ஷவின் வேட்புமனுவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே அக்கடிதம் தொடர்பான செய்திகளையோ அல்லது அக்கடிதத்தையோ மீண்டும் மீண்டும் பிரசுரிப்பதை தவிர்க்குமாறு தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை செய்தியாக வெளியிட்ட அதே மட்டத்திலேயே இன்று, மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கான செய்தியும் அமைந்திருக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X