2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தேசிய அரசாங்கத்தை உருவாக்க சு.க அனுமதி

Gavitha   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று (20) கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அனுமதியளித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினாலேயே, தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜெயந்த, எஸ்.பி.திஸாநாயக்க, சரத் அமுனுகம மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் அடங்கிய குழுவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை தாங்கினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X