Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தலையிடுவதுடன், குற்றப்புலனாய்வுப் பிரிவினால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டுவரும் 4 சந்தேகநபர்களும் தப்பிச்செல்ல முடியாத வகையில் அவர்களை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொட கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய சந்தியா எக்னெலிகொட, 'சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் தடுப்பில் வைத்து விசாரிக்க குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
'இச்சந்தேகநபர்களது 72 மணிநேரத் தடுப்பு முடிவுக்கு வரவுள்ளது. இவர்களை, தொடர்ந்தும் தடுப்பில் வைத்திருக்காவிடில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணையிலிருந்து இவர்கள் தப்பிவிடுவர்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தொழிற்சங்கத் தலைவரான சமன் ரத்நாயக்க, 'நீதிமன்றத்தை தவறாக வழிப்படுத்தும் நோக்கில், எக்னெலிகொட கொல்லப்படவில்லை என்றும் அவர் வெளிநாட்டில் உள்ளார் எனவும் கூறிய முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ மற்றும் மொஹான் சமரநாயக்க ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025