Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயமுள்ள பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக, டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயமுள்ள 7,500 பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டு அப்பகுதிகளை சுத்தப்படுத்துவதற்கான காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,700 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், நுளம்புகள் பரவக்கூடிய வகையிலான 52,000 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 6,200 பகுதிகளில் நுளம்புக் குடம்பிகள் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025