Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 31 , பி.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தற்போது ஆட்சியிலுள்ள நல்லாட்சி அரசாங்கம், புதிய அரசியலமைப்பின் கீழ், இந்நாட்டைப் பிளவுபடுத்தும் சதி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது” என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது யாழ்ப்பாணத்துக்குச் செல்லக்கூடிய நிலைமை காணப்படுகின்ற போதிலும், அது இன்னும் ஓரிரு தினங்களில் இல்லாமல் போய்விடும் என்றும் குறிப்பிட்டார்.
முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷவின் 74ஆவது பிறந்ததின நிகழ்வு, சூரியவெவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த, “இந்த நாட்டைக் காப்பாற்றுவது, எமது கடமையாகும். இந்த அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களைப் பார்க்குமிடத்து, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தெளிவாகிறது” என்றார்.
“இதனால், தேசிய பாதுகாப்பு தொடர்பில், இந்த அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு, பயங்கரவாத அமைப்பொன்றினால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பை, பிரபாகரன் படை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தால், இன்னும் ஓரிரு நாட்களில், யாழ்ப்பாணத்துக்குச் செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்” என, அவர் மேலும் கூறினார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago