2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ரூ. 70 மில்லியன் மோசடி: நாமலுக்கு எதிரான விசாரணை முடிந்தது

Gavitha   / 2016 ஒக்டோபர் 31 , பி.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிஷ் நிறுவனம் வழங்கிய 70 மில்லியன் ரூபாயினை, தவறான முறையில், நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, நேற்றுத் திங்கட்கிழமை (31), கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நிதி மோசடிச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாக, பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றத்துக்கு அறிவித்தது.  

அத்துடன், சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி, மேற்படி குற்றச்சாட்டுத் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அறிவித்தது.  

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கான ஆலோசனைகளை விரைவில் வழங்குமாறு, சட்டமா அதிபருக்கு, நீதவான் அறிவுறுத்தினார்.  

அத்துடன், அந்த ஆலோசனைகளை முன்னிலைப்படுத்துவதற்காக, இந்த வழக்கு, எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி, மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்​கொள்ளப்படும் என்று, நீதவான் அறிவித்தார். 

கடந்த 2013ஆம் ஆண்டில் இடம்பெற்ற றக்பி விளையாட்டுத் தொடரொன்றை நடத்துவதற்காக, கிரிஷ் நிறுவனத்திலிருந்து 70 மில்லியன் ரூபாய், நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாகவும் அப்பணத்தை அவர், தவறான முறையில் பயன்படுத்தினார் என்றும், வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, சொத்துக்களை சேகரித்த விதம் குறித்த தகவல்களை வெளியிடாமை சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை, கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  

 குறித்த வழக்கு, நேற்றுத் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .