2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வரட்சி, காற்று, மண்சரிவினால் 9 இலட்சம் ​பேர் பாதிப்பு

Gavitha   / 2017 ஏப்ரல் 10 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது நிலவுகின்ற வரட்சி மற்றும் வீசுகின்ற கடுங்காற்று, அதுமட்டுமன்றி மண்சரிவு அபாயம் ஆகியவற்றினால் , 13 மாவட்டங்களிலுள்ள 245,791 குடும்பங்களைச் சேர்ந்த 905,682 ​பேர் பாதிப்படைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.   

வரட்சியினால் கம்பஹா மாவட்டத்திலேயே, கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, 48,124 குடும்பங்களைச் சேர்ந்த 207,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வவுனியா மாவட்டத்தில் வரட்சியுடன், கடும் காற்றும் வீசியுள்ளது. பதுளை மாவட்டத்தில், மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது. 

டிசெம்பர் 19ஆம் திகதி முதல் நேற்று (10) வரையிலான காலப்பகுதிலேயே மேற்குறிப்பட்ட தொகையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தி​ருகோணமலை மாவட்டத்தில், 23,696 குடும்பங்களைச் சேர்ந்த 95,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், 901 குடும்பங்களைச் சேர்ந்த 3,057 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில், 3,398 குடும்பங்களைச் சேர்ந்த 11,250 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இ​தேவேளை, யாழ்ப்பாணத்தில் 33,404 குடும்பங்களைச் சேர்ந்த 121,442 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில், 33,670 குடும்பங்களைச் சேர்ந்த 115,020 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 23,206 குடும்பங்களைச் சேர்ந்த 80,973 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வவுனியாவில் ஏற்பட்டுள்ள வரட்சி மற்றும் கடும் காற்று காரணமாக 24,551 குடும்பங்களைச் சேர்ந்த 85,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியினால் 13,490 குடும்பங்களைச் சேர்ந்த 47,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கேகாலை மாவட்டத்தில் 740 குடும்பங்களைச் சேர்ந்த 3,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குருநாகல் மாவட்டத்தில் 20,916 குடும்பங்களைச் சேர்ந்த 71,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

புத்தளம் மாவட்டத்தில் 17,671 குடும்பங்களைச் சேர்ந்த 62,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 15 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், அந்நிலையம் அனுப்பிவைத்துள்ள புள்ளிவிவரவியல் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X