2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

22க்கு எதிரான மனுக்கள்: பரிசீலனை நிறைவு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் தொடர்பான பரிசீலனையை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், மனுக்கள் குறித்த மன்றின் வியாக்கியானம், சபாநாயகருக்கு அனுப்பப்படும் என இன்று (23) அறிவித்தது.

கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட ஒன்பது பேரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, 22ஆவது திருத்தத்தின் சரத்துக்கள் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பறிக்கப்படாது எனவும் அவை ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம், மன்றுக்கு அறிவித்தார்.

மனுக்களுடன் தொடர்புடைய எழுத்துபூர்வ விளக்கத்தை நாளை (24) சமர்ப்பிக்குமாறு மனுதார்களுக்கு உத்தரவிடப்பட்ட நீதிமன்றம், வியாக்கியானம் விரைவில் சபாநாயகருக்கு அனுப்பபடும் என்றும் அறிவித்தது.

22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை எனவும் அதனை பொது வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்வதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X