2025 ஜூலை 05, சனிக்கிழமை

231.54 கிலோகிராம் ஹெரோய்ன் விவகாரம்; படகின் உரிமையாளர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

2,778 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியைக் கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருளை சர்வதேச கடல் எல்லையிலிருந்து கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட டோலர் இயந்திரத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த டோலர் இயந்திரத்தின் ஊடாகவே. போதைப்பொருட்கள், சர்வதேச கடல் எல்லையிலிருந்து பேருவளை கடற் பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். அதன்பின்னர், டிங்கி படகொன்றின் மூலமாக கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த டோலர் இயந்திரத்தின் உரிமையாளரை, யட்டியந்​தோட்டை கீழ்   கராகொட பிரதேசத்தில் வைத்தே பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர், பேருவளையிலிருந்து, யட்டியந்தோட்டைக்கு தப்பிச் சென்றுவிட்டாரென்று கிடைத்த தகவலுக்கு அமையவே, பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்வதற்காக சந்தேகபர், களனி கங்கைக்குள் பாய்ந்து, நீந்திச்செல்வதற்கு முயன்றுகொண்டிருந்த போதே, கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேநபர், தன்னுடைய சகோதரனை பயன்படுத்தி, டிங்கி படகின் மூலமாக, 231.54 கிலோகிராம் போதைப்பொருளை கரைக்கு ​கொண்டுவந்துகொண்டிருந்த போதே, பொலிஸார் அவற்றை கைப்பற்றினர். அத்துடன், அந்த படகிலிருந்த இருவரையும் கைது செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .