2026 மே 11, திங்கட்கிழமை

dd

297 டெடனேட்டர்கள் மீட்பு; மூவர் கைது

Editorial   / 2019 ஜூலை 16 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலை – ஹெதிகம, சிறிபெரல்லகஹ மற்றும் பஹலவத்த ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, அப்பகுதியில் இருந்த இரண்டு வீடுகளில் இருந்து 297 டெடனேட்டர்கள் மற்றும் 290 சேவா நூல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தலை பொலிஸார், கொஹூவலை மற்றும் மத்தேகொட இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே, குறித்த பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .