Editorial / 2021 மே 29 , மு.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வாரம் மூன்று நாள்கள் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் போது,
274 சதவீதமான எம்.பிக்கள் பங்கேற்றிருந்தனர் என பாராளுமன்ற தொடர்பாடல்
அலுவலகம் அறிவித்துள்ளது.

கொவிட் 19 காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு, அரச மற்றும்
தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டமை
உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில் சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி
பாராளுமன்றம் மூன்று தினங்கள் கூடியது.
கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்த
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டமையும், அதற்கமைய விவாதம்
நடத்தப்பட்டமையாலும் அதிகமானர்களின் கவனம் பாராளுமன்றம் பக்கம்
திரும்பியது.
கடந்த 18, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் கூடிய பாராளுமன்றத்தில்
உறுப்பினர்களின் பங்கேற்பு உயர்ந்த மட்டத்தில் இருந்தமை விசேட அம்சமாகும். மே
18ஆம் திகதியன்று 202 பாராளுமன்ற உறுப்பினர்களும் (90 சதவீதம்), மே 19ஆம் திகதி
198 உறுப்பினர்களும் (88 சதவீதம்), மே 20ஆம் திகதி 216 பாராளுமன்ற
உறுப்பினர்களும் (96 சதவீதம்) அமர்வுகளில் பங்கேற்றிருந்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தடுத்துவைத்து
விசாரிக்கப்பட்டுவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும்
சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால்
ஜயசேகர ஆகிய இருவரும் பாராளுமன்றத்தின் மூன்று நாள் அமர்வுகளிலும்
பங்கெடுத்திருந்தனர். கொவிட் -19 சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய
அவர்களை கூட்டங்களில் கலந்துகொள்ளச் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட இன்னும் சில
எம்.பிக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. பாராளுமன்றக்
கட்டடத்தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தின் செயலாளர் உட்பட
10 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுதியானது.
இந்நிலையிலேயே, பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை மற்றும்
நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் தொடர்பிலான விவரங்களுடன், பாராளுமன்ற
தொடர்பாடல் அலுவலகம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago