2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

3 மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய 3 மாவட்டங்களில் பெய்து வரும் மழைக் காரணமாக, 3 மாவட்டங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவு எச்சரிக்கையானது, நாளை (19)  காலை (8.30 மணியிலிருந்து அமுலாகுமெனவும் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் தகவல்களை வழங்கவும் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பையேற்படுத்துமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

எனவே மண்சரிவு எச்சரிக்கைக் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், மண்சரிவுக்கான அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக அந்தப் பிரதேசத்தை விட்டு  பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும்  அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .