2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

3 முக்கிய அரசியல் கட்சிகளின் அவசர கலந்துரையாடல்கள் இன்று

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி, ஒன்றிணைந்த எதிரணி, பொதுஜன பெரமுன ஆகிய 3 முக்கிய அரசியல் கட்சிகள் இன்று அவசர கலந்துரையாடல்களுக்காக ஒன்று கூடவுள்ளன.

இதற்கமைய, கொழும்பு- விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இன்று பிற்பகல் வேளைகளில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில், கட்சி உறுப்பினர்களின் அபிப்ராயம் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இன்று பிற்பகல்  மஹிந்தவின் இல்லத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலுக்கு முன்பதாக, ஒன்றிணைந்த எதிரணி இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இன்று பகல் அலரிமாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதுடன், இதில் அமைச்சர்களான சஜித் பிரேமதாச, அகிலவிராஜ் காரியவசம், நவீன் திசாநாயக்க, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம ஆகியோர் இதில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .