Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 07 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் வாழும் மக்களில் 30 இலட்சத்து 35 ஆயிரத்து 143 பேர் மதுபானம் அருந்துகின்றனர். அவர்களில், 10 இலட்சத்துக்கு 63 ஆயிரத்து 383 பேர், நாளாந்தம் மதுபானம் அருந்துகின்றனரென, ஆய்வொன்றின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிப்பதற்கு, ஐ.தே.கவின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில், நேற்றுமுன்தினம் (05) ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும், அந்த நியமனத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அங்கிகாரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துவிட்டார்.
கட்சியின் செயற்குழு, அதன் தலைவர் ரணில் தலைமையில் நேற்று (06) கூட்டுவதற்கு, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்தச் செயற்குழுக் கூட்டம், தலைவரின் அறிவுறுத்தலுக்கு அமைய, பெப்ரவரி 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான பொது அரசியல் கூட்டணி, அதன் நிர்வாகப் பதவிகள் குறித்த இறுதி முடிவை, நேற்று (06) எடுப்பதற்கே உத்தேசிக்கப்பட்டிருந்தது.
ஜனவரி 29ஆம் திகதியன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தைப் பகிஷ்கரித்திருந்த சஜித் தலைமையிலான அணி, நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு, சில முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேசவிருந்தனரென அறியமுடிகின்றது. இந்நிலையிலேயே அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம், மார்ச் முதல் வாரத்தில் கலைக்கப்படவுள்ளதாக, ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனால் அதற்குத் தயாராகும் வகையில் உடனடியான சில முடிவுகளை எடுக்காமல், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நடந்துகொண்டதைப் போன்றே, கட்சித் தலைமை இழுத்தடிப்புச் செய்துவருகிறதென, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
பெப்ரவரி 10ஆம் திகதி திங்கட்கிழமையன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள செயற்குழுக் கூட்டம், அன்றைய தினமும் நடத்தப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்படுமாயின், சில தீர்மானங்களை சஜித் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி தன்னிச்சையாக எடுக்குமென அறியமுடிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago