2026 மே 02, சனிக்கிழமை

31ஆம் திகதி முக்கிய தீர்மானம்

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 20 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டு ஜனவரி இரண்டாம் வாரத்திலிருந்து பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருவதாகவும் இதற்கான அனுமதியை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாடளாவிய ரீதியில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான தீர்மானம் இந்த மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


சுகாதார மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கிடையில் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலை 7.30 மணியிலிருந்து பகல் 1.30 மணிவரை பாடசாலைகளை நடத்துவது சிறந்ததென, விசேட வைத்திய நிபுணர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மதிப்பாய்வு வகுப்புகளை நடத்த கோரப்பட்ட அனுமதிக்கு, சுகாதார அமைச்சு இதன்போது அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .