2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

323 கொள்கலன்கள் விவகாரம்: விசாரணை குழுவில் உபாலி

S.Renuka   / 2026 பெப்ரவரி 18 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்குட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினராக அமைச்சர் டாக்டர் உபாலி பன்னிலகே நியமிக்கப்பட்டுள்ளார்.

நிலையியற் கட்டளை 106 இன் விதிகளின்படி இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன இபுதன்கிழமை (18) அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அனுர கருணாதிலக்கவின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் டாக்டர் உபாலி பன்னிலகே நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக பரிசோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்டதை விசாரித்து, சம்பவம் குறித்து அறிக்கை அளித்து, பரிந்துரைகளை சமர்ப்பிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இந்தக் குழு செயல்படுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .