Editorial / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள 40 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து இதுவரை 3386 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனரென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்துடன் இன்று குண்டசாலை மத்திய நிலையத்திலிருந்த இருவரும் பூஸா கடற்படை முகாம் மத்திய நிலையத்திலிருந்து 11 பேரும் முல்லைத்தீவு மத்திய நிலையத்திலிருந்து 203 பேரும் என மொத்தமாக வீடுகளுக்குத் திரும்பியுள்ளனரென தெரிவித்தார்.
இவ்வாறு தனிமைப்படுத்தலை நிறைவு செய்து செல்பவர்கள் மேலும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனரென்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த 40 சுயதனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 3 விமானப்படையினரின் கண்காணிப்பிலும் 1 கடற்படையினராலும் 36 இராணுவத்தினராலும் நிர்வகிக்கப்படுவதாகவும் குறித்த, மத்திய நிலையங்களில் தொடர்ந்தும் 1277 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்தார்.
5 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 hours ago
09 May 2026