Lenin Raj / 2026 மார்ச் 19 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

- டி.கே.ஜி. கபில
சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 57 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு சீன நாட்டு பெண் வர்த்தகர்கள் வியாழக்கிழமை (19) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வியாழக்கிழமை (19) அதிகாலை 12:30 மணியளவில் சீனாவின் செங்டூ (Chengdu) நகரிலிருந்து 'எயார் சைனா' நிறுவனத்திற்குச் சொந்தமான CA-425 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்தனர்.
விமான நிலையத்தின் "பசுமை வழி"ஊடாக இந்தச் சிகரெட் தொகையைத் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்ல முயன்றபோதே இவர்கள் சிக்கியுள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் 38,000 அடங்கிய 190 கார்ட்டூன்கள் இதன்போது சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் தடுத்து வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



17 minute ago
30 minute ago
33 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
33 minute ago
47 minute ago