2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

4 மாவட்டங்களில் நாளை முதல் ஊசி

Editorial   / 2021 செப்டெம்பர் 05 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் நான்கு மாவட்டங்களில், நாளை (06) முதல் முன்னெடுக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்பிரகாரம், கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்படும் மத்திய நிலையங்களில் தடுப்பூசிகள் ஏற்றப்படும். கொழும்பு மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களுக்கு மேலதிகமாக. விஹாரமஹா​தேவி பூங்கா, தியன உயன, பனாகொட இராணுவ முகாம், வேரஹெர இராணுவ வைத்திய  படையணி தலைமையகம் ஆகியவற்றிலும் தடுப்பூசிகள் ஏற்றப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X