2026 மே 13, புதன்கிழமை

5 மாணவர்கள் மீது சக மாணவன் கத்திக்குத்து

Editorial   / 2026 மே 13 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


எப்பாவல பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றினுள், இன்று (13) ஐந்து மாணவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தரம் 12-இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.

  காயமடைந்த ஐந்து மாணவர்களும் அதே பாடசாலையில் உயர்தரத் தொழில்நுட்பப் பிரிவில் (Technology Stream) கல்வி பயிலும் தரம் 12 மாணவர்கள் ஆவர்.

  தாக்குதலை நடத்திய சந்தேக நபர் அதே பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் (Science Stream) கல்வி பயிலும் தரம் 12 மாணவராவார்.

  சந்தேக நபருக்கும் காயமடைந்த மாணவர்களில் ஒருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தகராறே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்தப் பகையைத் தீர்த்துக்கொள்ளும் நோக்கில் புதன்கிழமை (13) காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஆரம்பத்தில் ஒரு மாணவரை இலக்கு வைத்தே தாக்குதலை நடத்தியுள்ளார். இதன்போது, குறித்த மாணவரைக் காப்பாற்ற முயன்ற ஏனைய நான்கு மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவர்கள் அனைவரும் சிறு காயங்களுடன் எப்பாவல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .