Editorial / 2025 ஜூன் 30 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
51 வயதுடைய திருமணமான ஒருவர் ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக குருவிட்ட பொலிஸார் திங்கட்கிழமை (30) தெரிவித்தனர்.
குருவிட்ட பொலிஸ் பிரிவின் தேவிபஹல பகுதியைச் சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு நிரந்தர வேலை இல்லை, கூலி வேலை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரின் பக்கத்து வீட்டில் அவர் வசித்து வருகிறார்.
சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததாக சிறுமியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேக நபர் குருவிட்ட பொலிஸ் மகளிர் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி தற்போது இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த பொலிஸார், சந்தேநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
32 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago