2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

6 மாதங்களில் லஞ்சம் தொடர்பான சம்பவங்களில் 34 பேர் கைது

Simrith   / 2025 ஜூலை 31 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் லஞ்சம் தொடர்பான சம்பவங்கள் தொடர்பாக 34 நபர்கள் கைது செய்யப்பட்டதாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை 3,022 முறைப்பாடுகள் கிடைத்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில், 54 சோதனைகள் நடத்தப்பட்டு, 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த சந்தேக நபர்களில் இலங்கை பொலிஸை சேர்ந்த 10 அதிகாரிகள், நீதி அமைச்சின் 5 அதிகாரிகள், சுகாதார அமைச்சின் 2 அதிகாரிகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைளைச் சேர்ந்த 2 அதிகாரிகள் அடங்குவர்.

கூடுதலாக, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் லஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பாக 6 பொதுமக்கள் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில், லஞ்சம் தொடர்பான 60 சந்தேக நபர்களுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் 50 சட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும், 6 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன, அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 273 லஞ்சம் தொடர்பான வழக்குகள் தற்போது விசாரிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .