2025 ஜூலை 07, திங்கட்கிழமை

60 நாள்களில் பல ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்

Editorial   / 2020 ஜனவரி 24 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சியின் நான்கரை வருட காலப்பகுதியில் எந்தவொரு ஊடகவியலாளரும் நாட்டை விட்டுச் ​செல்லவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, இந்த அரசாங்கம் பதவியேற்று 60 நாள்களில் ஊடகத்துறையுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

நேற்று (23) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் மக்களைப் போலவே ஊடகங்களையும் பயமுறுத்தி, நாட்டுக்குள் ஒழுக்கத்தை நிலை நாட்ட முயல்வதாகவும் சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்தினால் மாத்திரமே ஒழுக்கத்தை நிலைநாட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .