Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 26 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்கெற்ற பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 64 சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவர்களை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் நுவரெலியாவில் செயற்பட்ட பயிற்சி முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்த4 பெண்களும் 60 ஆண்களும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் அழைத்துவரப்பட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago