2026 மே 02, சனிக்கிழமை

66 ஆயிரம் இலங்கையர்கள் விரைவில் வருவர்

Gavitha   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா ரைவஸ் நிலவரம் காரணமாக, பல நாடுகளில் சிக்கித்தவிக்கும் 66 ஆயிரம் இலங்கையர்கள், அந்தந்த நாடுகளில் இருந்து, திட்டமிடப்பட்ட விமானங்களின் ஊடாக, நாட்டுக்கு அழைத்து வரப்படுவர் என, வெளியுறவுத்துறை அமைச்சு, நேற்று (16) தெரிவித்தது.

இதன் பிரகாரம், நாளை (17) முதல், பல விமானங்கள் சேவையில் ஈடுடுபடுவதற்காக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஒரு வார காலத்துக்கு இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷ், ஜப்பான், சிங்கப்பூர், லெபனான், தென்கொரியா, பபுவா நியூ குனியா ஆகிய நாடுகளில் இருந்தே, இலங்கையர்கள் அழைத்து வரப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரானா நெருக்கடி ஆரம்பித்த நாள் முதல், 49 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .