Editorial / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய அரசாங்கம், எல்லாப் பக்கங்களிலும் பெயிலாகியுள்ளது எனத், தெரிவித்துள்ள ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க, இந்த அரசாங்கம் இன்னும் 7 மாதங்களுக்கு மட்டுமே ஆட்சியில் இருக்கும் என எதிர்வு கூறியுள்ளார்.
ஏழு மாதங்களின் பின்னர், அரசாங்கம் வீழும். அதனால்தான் அதற்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்த, அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்றார்.
கொரோனா வைரஸ் தொற்றால், மக்கள் நாளுக்கு நாள் மரணிக்கும் போது, அரசாங்கம் தனது தோல்வியை மறைக்க, தேர்தல் பெறுபேறுகளைக் காட்ட முயற்சி எடுக்கிறது. அந்த முயற்சியை எதிர்க்க வேண்டும் என்றார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago