2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

73 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் 73 பொலிஸ் அதிகாரிகளுக்கான இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நியமனமானது, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிலிருந்து கீழ் மட்ட பதவிகள் வரையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வர், பொலிஸ் அதிகாரிகள் 20 பேருடன், பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதற்கு மேலதிகமாக உதவிப் பொலிஸ் அதிகாரிகள் 24 பேர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 22 பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .